உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் முறிந்து விழுந்து தந்தை - மகன் காயம் 

மரம் முறிந்து விழுந்து தந்தை - மகன் காயம் 

திருப்பூர்; திருப்பூர், ெஷரீப் காலனியில் மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் வந்த தந்தை மகன் காயமடைந்தனர். திருப்பூர், கருவம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். அவர் மகன் சஷ்வந்த், 13. அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற சஷ்வந்த்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால், பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். பள்ளியிலிருந்து புறப்பட்டு இருவரும் சென்ற போது, வழியில் இருந்த பெரிய வேப்ப மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதில் பைக்கில் சென்ற தந்தை மகன் இருவரும் காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதில், மரத்தின் கீழ் நிறுத்தியிருந்த கார் ஒன்றும் சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை