வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்று பணக்காரத் தந்தைகளை கைது செய்ய முடியுமா? ஏனென்றால் ஆளுக்கொரு சட்டம், காசுக்கொரு நீதி.
மேலும் செய்திகள்
டூவீலர் - கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்
31-Dec-2024
திருப்பூர்:திருப்பூர், வீரபாண்டி, ஜெயலலிதா நகரைச் சேர்ந்தவர் வீராள், 65. நேற்று முன்தினம் அவர் தன் வீட்டருகே மகன் குமார் என்பவருடன் பேசியபடி நின்று கொண்டிருந்தார்.அப்போது, 17 வயது சிறுவன், அதிவேகமாக ஓட்டி வந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த வீராள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அந்த பெண், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின், தொடர் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்த புகாரின் படி, வீரபாண்டி போலீசார், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டியதாகவும், சிறுவனை பைக்கை ஓட்ட அனுமதித்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து, சிறுவனின் தந்தை ஆறுமுகத்தை கைது செய்தனர். விசாரணைக்குப் பின், சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இது போன்று பணக்காரத் தந்தைகளை கைது செய்ய முடியுமா? ஏனென்றால் ஆளுக்கொரு சட்டம், காசுக்கொரு நீதி.
31-Dec-2024