மகளுக்கு தந்தை ஆற்றும் உதவி
l நிகழ்ச்சி அரங்குக்கு முதலாவதாக வந்த மாணவி, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக குத்துவிளக்கேற்றினார்.l நிகழ்ச்சி துவங்கும் முன்பே ஆர்வமுடன் பெற்றோர் தங்கள் மகன், மகளை, அவர்களது இன்ஜி., கனவை நனவாக்கும் ஆவலுடன் அழைத்து வந்திருந்தனர்.l திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாத மகளுக்காக தந்தை ஒருவர் நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர்கள் பேசுவதை முழுவதையும் வீடியோ எடுத்து கொண்டார்.l கல்வி ஆலோசகர்கள் பேசிய பின், அவர்களிடம் கவுன்சிலிங், உயர்படிப்பு குறித்த சந்தேகங்களை பெற்றோர், மாணவ, மாணவியர் கேட்டறிந்தனர்.l உயர்கல்வியில் ஒவ்வொரு பிரிவினருக்கும் (எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி.,) என்னென்ன மதிப்பெண், எவ்வளவு இடங்கள் என்பது குறித்த விபரம் பவர்பாயின்டில் ஒளிபரப்பப்பட்டது. அதை பெற்றோர், மாணவர்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.