ராபி பருவத்துக்கு உரம் இருப்பு; வேளாண் அலுவலர் தகவல்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில், பெரும்பாலான மானாவாரி பயிர்களும், இரவை பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. ராபி பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக, வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது, யூரியா 2,751 டன், டி.ஏ.பி., 1,109 டன், பொட்டாஷ் 875 டன், சூப்பர் பாஸ்பேட் 483 டன், காம்ப்ளக்ஸ் உரம் 3,010 டன் இருப்பு உள்ளது.உரங்களை பாய்ன்ட் ஆப்சேல் மூலமாகவும்; விற்பனை விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தி, தர பரிசோதனைக்காக உர மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பிவருகின்றனர். விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.