திருவிழா நிறைவு
உடுமலை; உடுமலை ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.இக்கோவில் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 13ம் தேதி சக்தி அழைத்தல், அபிேஷக அலங்காரம், 14ம் தேதி பூவோடு எடுத்தல், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடந்த 16ம் தேதி அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பின்னர் கொடியிறக்குதல், அபிேஷகத்துடன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.