உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவருக்கு நிதி ஒதுக்கீடு

மாணவருக்கு நிதி ஒதுக்கீடு

திருப்பூர்: கிராமப்புற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விதமாக, ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான தேர்வு பிப். மாதம் நடந்தது. இதில் திருப்பூர் ஊரக பகுதியைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், 305 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா, ஆயி ரம் வீதம், மூன்று லட்சத்து, 5 ஆயிரம் ரூபாய் வழங்க கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நவ. மாதம், 2வது வாரத்துக்குள் இத்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !