உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேக்கரிக்கு அபராதம்

பேக்கரிக்கு அபராதம்

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு பேக்கரியில் ஒருவர் தின்பண்டம் வாங்கிச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்றில் உபாதை ஏற்பட்டதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் சென்றது. அதன் பேரில் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.அப்போது அங்கு கெட்டுப் போன உணவு பொருட்கள் எதுவும் இல்லை எனத் தெரிந்தது. இருப்பினும் அங்கு தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அக் கடைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி