உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முறைகேடான மின் பயன்பாடு ரூ.21.16 லட்சம் அபராதம்

முறைகேடான மின் பயன்பாடு ரூ.21.16 லட்சம் அபராதம்

திருப்பூர்; திருப்பூர் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் வகையில், மின்திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதாக, புகார் எழுந்துள்ளது. திருப்பூர் நகரில், போக்குவரத்து சிக்னல், விளம்பர போர்டு, சோதனை சாவடிகளுக்கு, தவறான மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தில், இப்பிரச்னை எதிரொலித்தது. நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில், மாநகராட்சி எல்லையில், தாராபுரம் ரோடு, நகரம் கிழக்கு மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் மின் திருட்டு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. காங்கயம் ரோடு, புதுார்ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், தவறாக மின்சார பயன்படுத்தப்படுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தவறான மின்சார பயன்பாட்டுக்கு, 21.16 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம், பாரபட்சமின்றி, புகார் வரும் அனைத்து இடங்களிலும் ஆய்வு நடத்தி, மின்சார வாரியத்துக்கான இழப்பை தடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ