வைக்கோலில் தீ; லாரி தப்பியது
பெருமாநல்லுார்; திருவாரூர் மாவட்டத்தில் இருந்து, வைக்கோல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று பெருமாநல்லுார், புதுப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வந்தது. தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி வைக்கோல் மீது உரசியது. வைக்கோலில் தீ பிடித்து எரிந்தது. டிரைவர் மற்றும் அங்குள்ளவர்கள் வைக்கோலை லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டு லாரியை அங்கிருந்து எடுத்து சென்றனர்.