மேலும் செய்திகள்
பைக் நிறுத்தும் போலீசார் மக்கள் நடமாட சிரமம்
20-Jan-2025
திருப்பூர்; திருப்பூர் நொய்யல் கரையை ஒட்டி, யூனியன் மில் ரோடு வந்து இணையும் இடத்தில் ரோடு பணி நடக்கிறது.நொய்யல் ஆற்றின் குறுக்கில் புதிய பாலம் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.இதற்காக நொய்யல் கரையை ஒட்டி அமைந்துள்ள ரோட்டின் குறுக்கில் மழை நீர் வடிகால் சமீபத்தில் கட்டப்பட்டது. கடந்த வாரம் நொய்யல் கரையில் நடந்த பொங்கல் விழாவின் போது, விழாவுக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படாத வகையில், இந்த இடத்தில் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொட்டியுள்ள மண் மீது பல மீட்டர் துாரம் வரை வாகனங்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், வாகனங்கள் கடந்து செல்லும் போது பெருமளவு மண் புழுதி பறக்கிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.இதனால், சிறு விபத்துகளும் நடப்பது வாடிக்கையாக உள்ளது. மண் புழுதி உருவாகும் இடத்தில் விரைவாக பணிகளை முடித்து தார் சாலை அமைக்க வேண்டும்.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'ஈஸ்வரன் கோவில் பாலம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், மிகவும் சிரமத்துடன் வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக ரோட்டில் புழுதி பறந்து தொல்லை கொடுக்கிறது. விரைவாக பாலத்தை கட்டினால் பரவாயில்லை,' என்றனர்.
20-Jan-2025