உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்க... ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை

மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்க... ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை

பல்லடம்; மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி, அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, பல்லடத்தில், ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பி.டி.ஓ., கனகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.பி.டி.ஓ., பேசியதாவது:இதுநாள்வரை மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பில் ஊராட்சிகள் இருந்தன. அதனால் , ஊராட்சி நிர்வாக பணிகளை அவர்களே முழுமையான கவனித்து வந்தனர். ஆனால், தற்போது, தனி அலுவலர்கள் பொறுப்பில் ஊராட்சிகள் உள்ளதால், அனைத்து பணிகளையும் நாம்தான் கவனிக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகள், தேவைகளுக்காக பொதுமக்கள் ஊராட்சிகளை தேடி வருவார்கள். அவர்களை தவிர்க்காமல், கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும். உங்களால் இயலவில்லை எனில், எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். அடிக்கடி வெளியே செல்லாமல், உங்கள் பகுதியில் இருந்து பொதுமக்கள் பணிகளை கவனித்தாலே போதுமானது.ஊராட்சி வரவு செலவு கணக்குகளை முறையாக பின்பற்றுங்கள். வரி வசூலில் கவனம் செலுத்தி, அரசுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து புகார் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தொடர்பு கொண்டு மக்கள் பணிகள் நடக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, கிடப்பில் உள்ள பல்வேறு பணிகள், அடிப்படை வசதி குறைபாடு மற்றும் பிரச்னைகள் குறித்து ஊராட்சி வாரியாக கேட்டறிந்தார். மக்கள் பணிகளை கிடப்பில் போடாமல், நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என, ஊராட்சி செயலர்களுக்கு, பி.டி.ஓ., அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை