எஸ்.கே.எல்., பள்ளியில் உணவுத் திருவிழா
திருப்பூர்: நெருப்பில்லாமல் உணவு தயாரிக்கும் கின்னஸ் சாதனை போட்டி, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்பள்ளி மாணவ, மாணவியர் 75 பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி ஆகியோர் வாழ்த்தினர்.