உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற முகாம்
பல்லடம்; உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம், பல்லடம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் நடந்தது. வட்டாரத்தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வரவேற்றார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''ஓட்டல்கள், பேக்கரி, மளிகை உள்ளிட்ட உணவுப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறுவது அவசியம். உரிமத்தை பெறுவது மிகவும் எளிமையாகும் என்பதால், சிறப்பு முகாமை பயன்படுத்தி உரிமத்தை பெற்றுக்கொள்ள வியாபாரிகள் முன்வர வேண்டும்'' என்றார். சிறப்பு முகாமில், 40க்கும் மேற்பட்ட வணிகர்கள் உரிமத்துக்கு விண்ணப்பித்தனர்.