உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சென்சுரி பள்ளியில் வன மகோத்சவம்

சென்சுரி பள்ளியில் வன மகோத்சவம்

திருப்பூர்; திருப்பூர், சென்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இம்மாதம், முதல் வாரம் துவங்கி, மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டு, 'வன மகோத்சவ' வாரம் கடைபிடிக்கப்படுகிறது.வன மகோத்சவத்தை முன்னிட்டு, நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட இருக்கின்றன.'மரங்களை வெட்டுவது, இயற்கையை கொலை செய்வதற்கு ஒப்பாகும். காடுகளின் அவசியம், அவற்றின் அழிவால் ஏற்படும் பாதகமான சூழ்நிலையை மாணவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் வனப்பகுதியை அதிகரிக்கவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களை நடுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை, மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும்' என்பது போன்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை