மேலும் செய்திகள்
பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
02-May-2025
பல்லடம் : பல்லடம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர், 32 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து மகிழ்ந்தனர்.பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1992- - 93ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முன்னாள் மாணவர்கள் மகாலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.இந்த சந்திப்பு குறித்த முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: 32 ஆண்டுகளுக்கு முன் பல்லடம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் சிலர் மட்டுமே தொடர்பில் உள்ளனர். தொடர்பில் உள்ள ஒரு சிலர் வாயிலாக, மற்ற மாணவ, மாணவியரின் விவரங்களை சேகரித்து, அனைவரையும் ஒன்று சேர்த்து விழா நடத்த திட்டமிட்டோம். இதன்படி, அனைவரிடமும் ஆலோசித்து, படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் எங்கள் நண்பர்களை சந்தித்து, பள்ளிக்கால நினைவுகளை அசை போட்டது, மீண்டும் பள்ளிக்கு சென்றது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதேபோல், ஆண்டுதோறும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, பள்ளிக்கல்வி காலத்தில் நடந்த நிகழ்வுகளை மாணவர்கள் நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து, தங்களது வேலை, தொழில், குடும்பம் உள்ளிட்டவை குறித்து அனைவரும் பகிர்ந்து கொண்டனர். கைப்பந்து, பூப்பந்து, என, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் விளையாடினர்.
02-May-2025