உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறக்கட்டளையின் தீபாவளி பரிசு : மாற்றுத்திறன் குழந்தைகள் மகிழ்ச்சி

அறக்கட்டளையின் தீபாவளி பரிசு : மாற்றுத்திறன் குழந்தைகள் மகிழ்ச்சி

பல்லடம்: பல்லடம் அடுத்த, கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் விவேகானந்தர் சேவா அறக்கட்டளை சார்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்லடம் வட்டார வள மையத்தில் நடந்தது. வட்டார வள மைய பொறுப்பாளர் அங்கயற்கண்ணி வரவேற்றார். பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, புத்தகப் பை, டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றுடன், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், இனிப்பு, காரம் மற்றும் மற்றும் பட்டாசு வழங்கப்பட்டன. இதனால், மாற்றுத்திறன் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். அறக்கட்டளை நிர்வாகிகளின் உதவிக்கு, வட்டார வள மைய பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை