மாற்றுத்திறனாளி மாணவர் இலவச மருத்துவ முகாம்
அவிநாசி; திருப்பூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், அவிநாசி வட்டார வள மையம் நடத்தும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை, அம்மாபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.முகாமில் தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் சிறப்பு கல்வி, உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் கட்டணமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும் பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகை சிறப்பு பயிற்சிகள் (தசை பயிற்சி) முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்தல், யு.டி.ஐ.டி வேலைக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். 18 வயது வரையிலான மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5, குடும்ப அட்டை நகல் 5, ஆதார் அட்டை நகல் 2 உள்ளிட்டவைகளை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.