இலவச மருத்துவ முகாம்
பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம், சக் ஷம் அமைப்பினர் இணைந்து, இலவச மருத்துவ முகாம், மங்கலம் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. கண், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. ஐ பவுண்டேஷன் மருத்துவ குழுவினர், 52 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். 4 பேருக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 5 பேர், இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மசி சார்பில், 55 பேருக்கு ரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.