இலவச மருத்துவ முகாம்
திருப்பூர், வாலிபாளையம் பனிரெண்டார் திருமண மண்டபத்தில் மக்கள் நண்பன் குணசேகரன் அறக்கட்டளை, ரோட்டரி திருப்பூர் காந்தி நகர், ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், ரேவதி மெடிக்கல் சென்டர் நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரனின் மனைவி கவிதா உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இலவச மருத்துவ ஆலோசனை, சலுகை கட்டணம் வழங்கப்பட்டது. முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முகாம் வழியாக பெறப்பட்ட 62 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. 195 பேர் இருதய பரிசோதனையும், 1,350 பேருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்தனர். ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.