உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இலவச பட்டா பொதுமக்கள் மனு

 இலவச பட்டா பொதுமக்கள் மனு

திருப்பூர்: பல்லடம் தாலுகா, அறிவொளி நகர் பகுதி பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கோரி, கலெக்டர் மனிஷ் நாரணவரே விடம் மனு அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: பல்லடம் தாலுகா, கல்லம்பாளையத்தில், நத்தம் புறம்போக்கு நிலம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் பட்டா கோட்டு, 24 குடும்பங்கள், கடந்த 2017ம் ஆண்டு முதல், கலெக்டர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் மனு அளித்து வருகிறோம். 2019ல், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தகுதியானவர்களுக்கு 2 சென்ட் நிலம் வழங்க உத்தரவு பெற்றுள்ளோம். 24 குடும்பங்களில், 15 குடும்பத்தினர் பட்டா பெற தகுதியானவர்கள் என, தாசில்தார் தெரிவித்தார். ஆனாலும், இதுவரை பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். எங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ