உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்று திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்

மாற்று திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்

திருப்பூர்: கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் பலர், இலவச ஸ்கூட்டருக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். நேற்று, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இலவச ஸ்கூட்டர் வழங்க நேர்காணல் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் 17 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். இதில், 10 பேர் இலவச ஸ்கூட்டருக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ