உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியின் பல இடங்களில் குப்பை...எரிகிறது; புகையால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

மாநகராட்சியின் பல இடங்களில் குப்பை...எரிகிறது; புகையால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகை குடியிருப்பு பகுதிகளில் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன்குப்பை சேகரமாகிறது. குப்பை சுற்றுப்பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. இறைச்சி, தொழிற்சாலை கழிவுகள், மக்காத கழிவுகள் ஆகியன ஆங்காங்கே குவிக்கப்பட்டுக் கிடக்கிறது. வார்டுதோறும் உள்ள செகண்டரி பாய்ன்ட், காலியாக உள்ள நிலங்கள், ரோட்டோர பள்ளங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் என பல இடங்களிலும் தற்போது குப்பை கழிவு தேங்கிக்கிடக்கிறது. அவ்வகையில், 50 ஆயிரம் டன் அளவுக்கு கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. இதுபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் பல இடங்களில் தீ வைக்கப்படுகிறது. குப்பை குவிந்து கிடக்கும் இடங்களில் தீ பிடித்தால், அது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம்கழித்து வரும்போது, பெருமளவு குப்பை எரிந்து சாம்பலாகி விடுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் குப்பை என்பதால் இதில் பற்றிய தீ அணைக்கப்பட்டாலும் புகைந்து கொண்டேயிருக்கிறது. எரியும் குப்பையில் வெளியேறும் புகை ரோட்டிலும் சுற்றுப்பகுதி குடியிருப்பு பகுதிகளிலும் பரவுகிறது. இதனால் அங்கு வசிப்போர் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.தற்போது பனிப் பொழிவு காரணமாக இந்த புகையும் விரைவில் மறைந்து விடாமல் காற்றில் கலந்து பரவிய வண்ணம் உள்ளது. நாள்தோறும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது போல் குப்பைக்கு தீ வைக்கப்பட்டு, அதனால், ஏற்படும் புகை பெரும் அவதியை மக்களுக்கு அவதி ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி