வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு காரியத்திலும் கிடையாது. நஷ்ட ஈடு கிடைக்காது.
மேலும் செய்திகள்
போக்குவரத்திற்கு லாயக்கற்ற வல்லம்கண்டிகை சாலை
05-Sep-2024
திருப்பூர்: மாநகராட்சி குப்பை லாரியில் கொண்டு சென்ற தகர ஷீட்டுகள் காற்றில் பறந்து ரோட்டில் விழுந்தது. ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் தனியார் நிறுவனம் மூலம், சேகரித்து அப்புறப்படுத்தப்படுகிறது.இப்பணியில் ஏராளமான லாரிகள் தினமும் லோடு கணக்கில் குப்பையை ஏற்றிக் கொண்டு பாறைக்குழியில் கொண்டு சென்று கொட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.இந்த வாகனங்களில் குப்பைகள் ரோட்டில் பறந்து செல்லாத வகையில், வலை மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வாகனங்களில் இது பின்பற்றப்படுவதில்லை. இதனால் ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை நகரப்பகுதியிலிருந்து குப்பை கழிவுகளை ஏற்றிக் கொண்டு நெருப்பெரிச்சல் பகுதியில் ஒரு லாரி சென்றது. அதில் கொண்டு சென்ற, சில தகர ஷீட்டுகள் லாரியிலிருந்து காற்றில் பறந்து சென்று ரோட்டில் விழுந்தது. அவ்வழியாக அந்த நேரத்தில் கடந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, வாகனத்தை திருப்பி தப்பினர்.சற்று கவனிக்காமல் இருந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ரோட்டில் சென்றவர்கள் இது குறித்து சத்தம் போட்டும் தகர ஷீட்டை பறக்க விட்ட லாரி நிற்காமல் சென்று விட்டது. அவ்வழியாகச் சென்ற ஒருவர் ரோட்டில் கிடந்த தகர ஷீட்டுகளை அப்புறப்படுத்தினார்.இது போல் மெத்தனமாகச் செயல்படும் ஊழியர்களுக்கு ஒப்பந்த நிறுவனம், மாநகராட்சி அலுவலர்கள் உரிய எச்சரிக்கை வழங்கி கண்காணிக்க வேண்டும்.
ஒரு காரியத்திலும் கிடையாது. நஷ்ட ஈடு கிடைக்காது.
05-Sep-2024