உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எரிவாயு குழாய் பதிப்பு பணிகள்; இடைக்கால தடைக்கு வரவேற்பு

எரிவாயு குழாய் பதிப்பு பணிகள்; இடைக்கால தடைக்கு வரவேற்பு

பல்லடம்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தேவனகொந்தி வரை எரிவாயு எண்ெணய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.ஏற்கனவே அமைக்கப்பட்ட எண்ணெய் குழாயையும், தற்போது அமைக்கப்பட்டு வரும் எண்ணெய் குழாயையும், சாலை மார்க்கமாக பதிக்குமாறு விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை பெற்றார்.இச்சூழலில், திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம், நடராஜன், பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, சரஸ்வதி ஆகியோர் தொடர்ந்த வழக்கிலும், சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த பாரத் பெட்ரோலியம் நிறுவனம், மத்திய அரசிடம் இருந்து உரிய அனுமதியை பெறாமல், பழைய அனுமதியை வைத்து செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குழாய் பதிப்பு பணிக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை