உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது மருத்துவம் ரத்த தான முகாம்

பொது மருத்துவம் ரத்த தான முகாம்

திருப்பூர்;திருப்பூர், செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரியில் பொது மற்றும் ரத்ததான முகாம்கள் நேற்று நடந்தன. மேயர் தினேஷ்குமார், கல்லுாரி முதல்வர் சகாய தமிழ்ச்செல்வி, செயலாளர் அருள் சீலி தலைமை தாங்கினர். அகரம் மருத்துவமனை, பரணி மெடிக்கல் சென்டர், ஏ.ஆர்.எஸ். மருத்துவமனை, மித்ரா கிட்னி சென்டர், லோட்டஸ் கண் மருத்துவமனை, திருப்பூர் லேப்ராஸ்கோப்பி சென்டர், நவீன்ஸ் மூகாம்பிகை பல் மருத்துவமனை, முயற்சி மக்கள் அமைப்பு, தாராபுரம் அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் இணைந்து முகாமை நடத்தின. சிறுநீரகம், பல், கண், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு மற்றும் பொது ஆகிய பிரிவுகளில் மருத்துவ முகாமும் ரத்ததான முகாமும் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை