சிறுமி கர்ப்பம்; 2 பேர் கைது
திருப்பூர் : திருப்பூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவரது தாய், வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். வளர்ப்பு தந் தையிடம் வேலை செய்து வந்த மணிகண்டன், 34 என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகினார்.திருவாரூரை சேர்ந்த மரியதாஸ், 25 என்பவரும் பேசி வந்தார். சிறுமி யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அத்துமீறல் காரணமாக, சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்தனர். அதில், நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இந்த வழக்கில், மரியதாஸ், 25 மற்றும் மணிகண்டன், 34 ஆகியோரை 'போக்சோ' பிரிவில்கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.