உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

கொடுவாய் கிளை, தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், சங்க கொடி ஏற்றுதல், உறுப்பினர் அட்டை வழங்கல், பயிற்சி சான்றிதழ் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா கொடுவாய் வி.எஸ்.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்தது. கிளை தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார்.கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். சங்கக் கொடி ஏற்றப்பட்டது. உறுப்பினர் அட்டை, பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. தையல் கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம், மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் பாலு, மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி