உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

திருப்பூர்;சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி போன்ற பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் காங்கயம் வழியாக பழநி தைப்பூசத்துக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். தற்போது, விரதம் இருந்து பழநிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். நாளுக்கு நாள், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு, காங்கயம் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் பக்தர்களின் கைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் கட்டி வருகின்றனர். பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கி போக்கு வரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ