உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனைக்கு போங்க... சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைக்கு போங்க... சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்

குரங்கம்மை அறிகுறியா?அரசு மருத்துவமனைக்கு போங்க...சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்குரங்கம்மை அறிகுறியா?அரசு மருத்துவமனைக்கு போங்க...சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்திருப்பூர், நவ. 10-'குரங்கம்மை அறிகுறிகள் தெரியவந்தால், தொடர் உடல் குறைவு ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனை நாடலாம்,' என, மாவட்டம் மற்றும் சுகாதார பணிகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.தொடர் காய்ச்சல், தீராத தலைவலி, தசைப்பிடிப்பு, உடல்வலி மற்றும் தடிப்புகள், உடல்சோர்வு, கழுத்தில் நெறிகட்டுதல், தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டு உடல் முழுதும் பரவுதல், தொண்டைப்புண், இருமல், கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறுவது குறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை நாடலாம். டாக்டர்கள் தேவையான ஆலோசனை வழங்குவர். தேவையிருப்பின் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், 'குரங்கம்மை தொற்றுநோய் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் உட்பட பிற விமான நிலையம் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்குள் வருவோர் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.ஏதேனும் உடல் நல குறைவு இருந்தால், அவர்களது விபரங்கள் பெற்று, ஒரு வாரம் உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் நோய் அறிகுறியுடன் யாரும் வரவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை