பழனியப்பா பள்ளி மாணவியருக்கு தங்கம்
திருப்பூர்: திருப்பூர் சகோதயா சார்பில் யங் இந்தியா பள்ளியில் நடந்த சகோதயா இடைநிலைப்பள்ளி சிலம்பம் போட்டியில் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர். 15 வயதினர் பிரிவில் மாணவி நிதர்ஷனாவும், 16 வயதினர் பிரிவில் மாணவி பைரவியும் தங்கப்பதக்கம் வென்றனர். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்.