தங்கம் வென்ற தங்கங்கள்
திருப்பூர் : பல்கலை தேர்வு முடிவில், குமரன் மகளிர் கல்லுாரி மாணவியர், பல்கலை அளவில், ஆறு பேர் முதலிடம், ஆறு தங்கம் உட்பட, 52 ரேங்க் பெற்று அசத்தியுள்ளனர்.கோவை பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருப்பூர் மங்கலம் ரோடு, குமரன் கல்லுாரி மாணவியர் ஆறு பேர் தங்கப்பதக்கம் பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு
பல்கலை அளவில் முதலிடம் பெற்றவர்கள்: பி.காம்., கூட்டுறவுத்துறை மாணவி யமுனா, ஸ்ரீசுவாதி (பி.காம்.,) லாவண்யா (பி.காம்., சி.ஏ.,), கவுசல்யா (பி.காம்., கணிதம் சி.ஏ.,) தர்ஷனா (எம்.எஸ்.சி., கணிதம்), சரண்யா (எம்.காம்., சி.ஏ.,) முதல் பத்து இடத்தில்...
ராகசுதா (பி.காம்.,) கலைவாணி, மகாலட்சுமி, விஜி., (பி.காம்., கூட்டுறவுத்துறை), பொன்மொழி, சுபதாரணி (பி.காம்., பி.ஐ.,), சவுமியா, பிரபன்யா, முத்தரசி, மீனகா, சோனா, பொன்காவ்யா, அமுதா, ஸ்ரீதிகா (பி.காம்.,சி.ஏ.,), சுபப்பிரியா, லோமன்யா, காவ்யா (பி.பி.ஏ.,) அபர்ணா, கவுசிகா (பி.சி.ஏ.,) அபிதா (பி.எஸ்.,கம்ப்யூட்டர் சயின்ஸ்), கார்த்திகாயினி, தீபிகா, தர்ஷனி (பி.எஸ்.சி., மைக்ரோபயாலஜி), வித்யஸ்ரீ பி.எஸ்.சி., (சி.டி.எப்.,), மகாலட்சுமி, சரண்யா, பி.சரண்யா (பி.எஸ்.சி., கணிதம் சி.ஏ.,).ரஷிகா, கோமதி, மகாலட்சுமி, லலிதா (எம்.ஏ., ஆங்கிலம்), கீர்த்தனா, பூஜாஸ்ரீ (எம்.காம்., ஐ.பி.,), பூவிழி, கீர்த்தனா, கவிதா (எம்.எஸ்.சி., கணிதம்), ரோஹிணி, சுவேதா, வாசுகி (எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்), யமுனா, கார்த்திகா (எம்.எஸ்.சி., மைக்ரோபயாலஜி), கார்த்திகா, அனிதாமரியா ஆன்டனி, நந்தினிதேவி (எம்.காம்.சி.ஏ.,)பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியரை கல்லுாரி முதல்வர் வசந்தி, கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் மற்றும் துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பாராட்டினர்.