உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருச்சி பஸ்கள் வழித்தடம் மாற்றம்: அரசு பஸ் டிரைவர்கள் எதிர்பார்ப்பு

 திருச்சி பஸ்கள் வழித்தடம் மாற்றம்: அரசு பஸ் டிரைவர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: 'பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்குள் நுழையும் திருச்சி பஸ்கள் வழித்தடத்தை மாற்ற வேண்டும்,' என, டிரைவர்கள் வலியுறுத்துகின்றனர். திருப்பூர், குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை முன் சுரங்கப்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ஸ்டாண்ட், முனிசிபல் ஆபீஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பார்க் ரோடு, நடராஜா தியேட்டர் சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேநேரம், திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக திருப்பூருக்குள் நுழையும் பஸ்கள் வழித்தடம் போக்குவரத்து போலீசாரால் சரிவர தீர்மானிக்கப்படவில்லை. வழக்கமாக திருச்சி பஸ்கள் நகருக்குள் வந்த பின் வளம் பாலம் - ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா, எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் சந்திப்பு வழியாக செல்லும்; இப்போது இப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், திருச்சியில் இருந்து வரும் பஸ்கள் ரவுண்டானாவில் இருந்து யூனியன் மில் ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் பஸ் ஸ்டாப் சந்திப்பு வழியாக ஊத்துக்குளி ரோட்டை அடைந்து, ரயில்வே ஸ்டேஷன் சென்று, குமார் நகர், 60 அடி ரோடு வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றடைகிறது. அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது: யூனியன் மில் ரோடு அகலம் குறைவாக உள்ளது. எதிரே கனரக வாகனங்கள் வந்து விட்டால், நெரிசல் ஏற்படுகிறது. ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் சந்திப்பு அருகே வளைவில் திரும்ப வழியின்றி மையத்தடுப்புக் கற்கள் வைத்துள்ளனர். நகருக்குள் நுழைய இதை விட்டால், தற்போதைக்கு வேறு சாலை என்கின்றனர், போக்குவரத்து கழக அதிகாரிகள். போக்குவரத்து போலீசாரும் இருப்பதில்லை. ஆறு முதல் எட்டு மணி நேரம் பஸ் ஓட்டி வரும் டிரைவர், நகருக்குள் நுழைந்து, அரை மணி நேரம் நெரிசலில் சிக்கி, அதன் பின் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றடைய வேண்டியுள்ளது. எனவே, திருச்சி பஸ்கள் நகருக்குள் நுழையும் வழித்தடத்தை மாற்ற வேண்டும். தற்காலிகமாக யூனியன் மில்ரோட்டின் ஒரு பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ