உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் கடும் அவதி

பாதியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் கடும் அவதி

பல்லடம்: பொள்ளாச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை திருப்பூர் நோக்கி புறப்பட்டது.பல்லடத்தை அடுத்த, புளியம்பட்டி பிரிவு அருகே, பஸ் திடீரென மக்கர் ஆகி நின்றது. பஸ் ஓட்டுநர் பலமுறை முயன்றும் பஸ்சை இயக்க முடியவில்லை.பரிசோதித்ததில், பஸ் இன்ஜின் பழுதானது தெரியவந்தது. பஸ்ஸில் வந்த பயணிகள் அங்கேயே இறக்கிவிடப்பட்டு, மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, பழுதான பஸ், டிப்போவுக்கு எடுத்துச் செல்லாமல், இன்ஜின் கழற்றப்பட்டு ரோட்டோரத்திலேயே பழுது பார்க்கும் பணி துவங்கியது.நேற்று இன்ஜின் பழுதான அரசு பஸ் நின்றிருந்த இடத்தில் இருந்து, பல்லடம் போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்ல, ஏறத்தாழ, 10 கி.மீ., துாரம் இருந்தது. இருப்பினும், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பொள்ளாச்சி ரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணி மணிக்கணக்கில் நடந்தது.நடுவழியில் நிற்காதவாறு, அரசு பஸ்களை முறையாக பராமரித்தால் மட்டுமே பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை