சிவன்மலை மலைப்பாதையில் அரசு பஸ்கள் அனுமதி மறுப்பு
திருப்பூர்; சிவன்மலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது.அடிவாரத்தில் இருந்து மலைமீது செல்லஹிந்து அறநிலையத்துறை மூலம் இரண்டு பஸ்கள் வழக்கமாக இயக்கப்படுகிறது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு பஸ்களும் காங்கயம், மற்றும் திருப்பூரில் இருந்து மலைமீது வரை இயக்கப்படும். நடப்பாண்டு இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை. மாறாக, தனியார் பஸ்கள் மலை மீது இயக்கப்பட்டது. போக்குவரத்து கழக, அதிகாரிகள் கூறுகையில், 'இவ்விவகாரம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம்,' என்றனர்.