அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
உடுமலை; உடுமலையில், அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு ஊழியர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளும் பெரம்பலுார் மாவட்ட கலெக்டரை கண்டித்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட கிளை தலைவர் மார்க்கண்டன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அம்சராஜ், வட்ட கிளை செயலாளர் வெங்கிடுசாமி, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.