உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியர் - மக்கள் உரையாடல் ஒரே மொழியாக இருக்க வேண்டும்

அரசு ஊழியர் - மக்கள் உரையாடல் ஒரே மொழியாக இருக்க வேண்டும்

திருப்பூர்; 'அலுவலக பணியாளர்கள் பேசும் மொழியும், பொதுமக்கள் பேசும் மொழியும் ஒரே மொழியாக இருக்கவேண்டும்; அதுவே ஆட்சி மொழி' என, ஆட்சிமொழிப் பயிலரங்கில் தெரிவிக்கப் பட்டது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலர் களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ முன்னிலை வகித்தார்.மதுரை உலக தமிழ்ச் சங்க முன்னாள் இயக்குனர் சந்திரா பேசியதாவது:ஆட்சி மொழி என்றால், ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை அனைத்து நிலைகளில் உள்ள அலுவலக பணியாளர்கள் பேசும் மொழியும், பொதுமக்கள் பேசும் மொழியும் ஒரே மொழியாக இருக்கவேண்டும்.தமிழ் மொழியை புரிந்து கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், அரசு பணியில் சேர ஆங்கிலம் கட்டாயம் உள்ளிட்ட விதிமுறைகளை கொண்டுவந்தனர். மெக்காலே இங்கிலாந்து மகாராணிக்கு எழுதிய கடிதத்தில், 'இந்தியர்கள் பிறப்பால் மட்டும்தான் இந்தியர்கள்; மொழியால் ஆங்கிலேயர்கள்' என குறிப்பிட்டுள்ளார்.அதுபோலவே நாமும், மொழி விடுதலை அடையமுடியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவருக்கும் தமிழ் மொழி மீதான பற்றுதல் இருக்கவேண்டும். அனைவரும் ஆட்சி மொழிச்சட்டத்தை கடைபிடிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை