மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
20-Mar-2025
திருப்பூர்:'தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி கோரிக்கையை விளக்கி பேசினார்.பல்வேறு அரசுத்துறை சார்ந்த ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
20-Mar-2025