உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் சிதறும் ஜல்லி; வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

ரோட்டில் சிதறும் ஜல்லி; வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

பல்லடம்; -காரணம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான கல் குவாரிகள், கிரஷர் நிறு வனங்கள் உள்ளிட்டவை உள்ளன.இங்கிருந்து, டிப்பர் லாரிகள் மூலம், ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவை, வெளி மாநில, மாவட்டங்களுக்கு அதிக அளவில் செல்கின்றன. இவ்வாறு, சில லாரிகளில் அதிகப்படியான லோடு ஏற்றி எடுத்துச்செல்லும்போது, அவை, ரோட்டில் சிதறி கிழே விழுகின்றன. இவற்றால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.தேசிய நெடுஞ்சாலை என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், காரணம்பேட்டை வழியாக வந்து செல்கின்றன. சில டிப்பர் லாரிகள், அடிக்கடி இதுபோல் ஜல்லி கற்களை ரோட்டில் சிதறி விட்டு செல்வதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேளிவிக்குறியாகி உள்ளது.எனவே, அதிக லோடு வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை