மேலும் செய்திகள்
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
17-Jan-2025
உடுமலை; தொடர் மழைக்கு பிறகு, மண் வளத்தை மேம்படுத்த, பசுந்தாள் உரங்களை உடுமலை வட்டார விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.உடுமலை சுற்றுவட்டாரத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை சீசனில், பெய்த தொடர் மழையால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வழக்கமாக, பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல்வேறு மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படும்.மானாவாரி சாகுபடிக்கும், அடுத்த பாசன சீசனில், காய்கறி உள்ளிட்ட சாகுபடி செய்யவும், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை, விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.குறிப்பாக, தொடர் சாகுபடியால், மண் வளம் பாதித்துள்ளதை தவிர்க்க, சாணம் உட்பட தொழு உரங்களை அடியுரமாக இடுகின்றனர்.மேலும், சணப்பை, கொள்ளு போன்ற பசுந்தாள் உரங்களுக்கான பயிர்களை விதைப்பு செய்துள்ளனர்.இதில், சணப்பை பூ விட்டதும், அப்படியே விளைநிலத்தில், மடக்கி உழவு செய்கின்றனர்.இதனால், மண் வளம் அதிகரித்து, அடுத்த சாகுபடியில், கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது; ஆனால்,சீசனில் பசுந்தாள் உரங்களுக்கான விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
17-Jan-2025