உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமை பாதுகாப்பு; ஐரோப்பிய நாடுகள் முக்கியத்துவம்

பசுமை பாதுகாப்பு; ஐரோப்பிய நாடுகள் முக்கியத்துவம்

திருப்பூர்,; ''ஸ்கிரீன் பிரின்டிங் தொழில்நுட்பத்தில், இயற்கையைச் சீரழிக்காத பசுமை பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தை ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கின்றன'' என்று திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஸ்கிரீன் பிரின்டிங்கில், ஐரோப்பிய நாடுகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் விதிமுறைகள் குறித்து, திருப்பூர், காயத்ரி ஓட்டலில் நேற்று கருத்தரங்கு நடந்தது. ஸ்கிரீன் பிரின்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், ஐரோப்பிய ஸ்கிரீன் பிரின்டிங் அசோசியேஷன் மூலம் நடந்த இக்கருத்தரங்குக்கு, திருப்பூர் பிரின்டர்ஸ் அண்ட் மேனேஜர்ஸ் அமைப்பு ஏற்பாடு களைச் செய்திருந்தது. அசோசியேஷன் செயலாளர் ஜிக்னேஷ் லபாசியா வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதி நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பேரரசு, சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐரோப்பிய நாடுகளின் ஐந்தாண்டு திட்டங்கள் ஐரோப்பிய ஸ்கிரீன் பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் கிரேம் ரிச்சர்ட்சன், ஐரோப்பிய நாடுகளில் அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டங்கள், எதிர்பார்ப்புகள்; ஸ்கிரீன் பிரின்டிங் தொழிலில் பின்பற்றப்படும் விதிமுறைகள்; தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பிரின்டிங் தொழில் சார்ந்த கண்காட்சிகளில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். ஐரோப்பிய அசோசியேஷனுடன் இணைந்துள்ள பல்லாயிரம் நிறுவனங்கள், பல நாடுகள், பல நாடுகளின் இணைப்பு சங்கங்கள் குறித்தும் பேசினார். நீடித்த நிலையான வழிமுறைகள் பிரின்டிங் துறையில் நீடித்த நிலையான வழிமுறைகள் பின்பற்றுவது; இயற்கையை சீரழிக்காத பசுமை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகள் விளக்கப்பட்டன. ஸ்கிரீன் பிரின்டிங்கில் வண்ணங்கள் கையாளும் முறை மற்றும் அதில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து, முன்னணி ஆலோசகர் ஜோஸ் தாமஸ் பேசினார். டிஜிட்டல் பிரின்டிங்கின் சிறப்பு மற்றும் உலகளாவிய எதிர்பார்ப்பு குறித்து தீபக் சித்தார்த், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பம் குறித்து ராஜேந்திர பாட்டீல் ஆகியோர் பேசினர். ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி