குரூப் - 1 போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர்: கலெக்டர் மனிஷ்நாரணவரே அறிக்கை: 2026ம் ஆண்டுக்கான குரூப் - 1 தேர்வுக்கான அறிவிப்பு, வரும், ஜூன் 23ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கலெக்டர், டி.எஸ்.பி. உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர் பணியிடங்களுக்கான தேர்வு இது. தேர்வெழுத விருப்பமுள்ளவர்களுக்கென, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 16ம் தேதி, காலை, 10:30 மணி முதல், பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது. இப்பயிற்சியில், மாதமிருமுறை மாதிரி தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்கள் பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது, 0421 - 2999152, 9499055944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.