மேலும் செய்திகள்
குரூப் -- 2 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
27-Sep-2024
உடுமலை : உடுமலையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், உடுமலை பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குடிமைப்பணிகள், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.உடுமலை, பழநி, தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்தும் தேர்வர்கள் இந்த வகுப்புகளுக்கு வருகின்றனர்.குரூப்-2 முதன்மைத்தேர்வு சில மாதங்களில் நடக்க உள்ளது. குருப் 2 பிரிமிலினரி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இத்தேர்வில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது குரூப்- 2 முதன்மைத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், உடுமலை மையத்தில் துவக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் சுரேஷ் பயிற்சிகளை துவக்கி வைத்தார். நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.அரசு விடுமுறை நாட்கள் தவிர, நாள்தோறும் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை வகுப்பு நடக்கிறது. வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும் மையத்தில் நடக்கிறது.தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பமுள்ள தேர்வர்கள், வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.
27-Sep-2024