உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி

தென்னையில் ஊடு பயிராக தானிய பயிர் சாகுபடி

உடுமலை : தென்னை விவசாயிகள் ஊடு பயிராக, தானிய சாகுபடி மேற்கொள்ள, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தற்போது நல்ல மழை பெய்துள்ள நிலையில், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், தென்னையில் ஊடு பயிராக,, உளுந்து, மக்காச்சோளம், பச்சை பயறு, தட்டை பயறு,, கொள்ளு, கம்பு ஆகிய பயறு மற்றும் தானியங்களை சாகுபடி செய்யலாம்.விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் வேளாண்துறையில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை