உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிகாட்டி மதிப்பு ஆட்சேபனை இணைய வழி வசதி தேவை

வழிகாட்டி மதிப்பு ஆட்சேபனை இணைய வழி வசதி தேவை

வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அந்த பதிவுக்கு அடிப்படையான வழிகாட்டி மதிப்பில் தவறு இருந்தால், அதை திருத்தக் கோரி ஆட்சேபனை தெரிவிக்க மட்டும் இன்னும் பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் திருப்பூரில் இப்போது எழுந்துள்ள கேள்வி. மாவட்டத்தில் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்புகளை சந்தை மதிப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. புதிய மதிப்புகள் தயாரிக்கப்பட்டு விட்டன. இதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சொல்லியிருக்கிறது. ஆனால் நடைமுறை தான் சிக்கல். புதிய மதிப்பு பட்டியல் பத்திரப்பதிவு மற்றும் தாலுகா அலுவலகங்களில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனையை நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நேரில் போய் தான் கொடுக்க வேண்டும். பஸ் வசதி கூட சரியாக இல்லாத நெருப்பெரிச்சலுக்கு, ஒவ்வொரு ஊரில் இருந்தும் பொதுமக்கள் வந்து பட்டியலை பார்த்து, ஆட்சேபனை தயாரித்து கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இது குறித்து திருப்பூர் வக்கீல் மணிவண்ணன் கூறுகையில், வழிகாட்டி மதிப்புகளை இணையத்தில் வெளியிட வேண்டும். அதே தளத்தில் ஆட்சேபனை பதிவு செய்யும் வசதியை கொடுக்க வேண்டும். கருத்து தெரிவிக்க காலக்கெடுவும் அறிவிக்க வேண்டும். அப்போது தான் அனைவரும் எளிதாக பங்கேற்க முடியும் என்றார். டிஜிட்டல் யுகத்தில் பதிவு ஆன்லைனில், ஆட்சேபனை ஆப்லைனில் என்ற முரணை மாற்ற வேண்டிய நேரம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி