ஜி.வி.ஜி. விசாலாட்சி கல்லுாரிக்கு விருது
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லுாரிக்கு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்காக 'ஸ்கில்லிங் எக்சலன்ஸ்' விருது வழங்கப்பட்டது. கோவையில் 'ஐசிடி பிரிட்ஜ் 2025' நிகழ்ச்சி நடந்தது. இதில் உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரியின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்காக ' ஸ்கில்லிங் எக்சலன்ஸ்' விருது வழங்கப்பட்டது. கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவியர், 'மாங்கோடீபி' என்ற பட்டயபடிப்பிற்கான சான்றிதழ் பெற்றதற்கு இந்த விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவியரை வழிநடத்திய கல்லுாரி செயற்கை நுண்ணறிவு திறன் துறைத்தலைவர் சசிகலாவுக்கு மென்டார்ஷிப் எக்சலன்ஸ் விருது வழங்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் சுமதி, இயக்குனர் மஞ்சுளா, கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.