உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கைவினை திட்டம் மானிய கடனுதவி

கைவினை திட்டம் மானிய கடனுதவி

திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையில்லாக் கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும், ஆண்டுதோறும், 10 ஆயி ரம் நபர்கள் பயன்பெறும் வகையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கைவினை திட்டம் 2024-25 முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் பல்வகை கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில் திறன் சார் மேம்பட்ட பயிற்சியுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல், மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.கடன் தொகையில், 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் காலத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்த வகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ, அந்த தொழிலில் குறைந்த பட்சம், 5 ஆண்டுகள் முன்அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டு அடிப்படை தகுதிகளும் கொண்டோர் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.விண்ணப்பிக்க தனி நபரின் போட்டோ, ஆதார் கார்டு, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை.எனவே, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ், பயன்பெற வேண்டுமென கேட்டு கொள்ளப்படுகிறது.திட்டம் குறித்த மேலான தகவல்களை பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுார், திருப்பூர். அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0421-2475007 ஆகிய எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !