உள்ளூர் செய்திகள்

கைத்தறி கண்காட்சி

திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்டம் மற்றும் கல்லுாரி பேரவை இணைந்து, கைத்தறி கண்காட்சியை நடத்தின. கல்லுாரி முதல்வர் வசந்தி, துவக்கி வைத்தார். 'கைத்தறிக்கு கை கொடுப்போம்' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், உடுமலை சர்வோதயா சங்கம், படியூர், அன்னுார், சர்வோதயா சங்கங்கள் மற்றும் சவுடாம்பிகை கைத்தறி சேலை விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இவற்றில் நுால், பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், கைத்தறி துண்டுகள், சட்டைகள் உள்ளிட்ட கைத்தறி துணிகள், கண்ணை கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை