உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறுவடை விவசாய கண்காட்சி உடுமலையில் நாளை துவக்கம்

அறுவடை விவசாய கண்காட்சி உடுமலையில் நாளை துவக்கம்

உடுமலை : உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், ஜி.வி.ஜி., கலையரங்கில், 'அறுவடை' என்ற தலைப்பில் விவசாய கண்காட்சி நாளை துவங்கி, வரும், 4ம் தேதி வரை நடக்கிறது.இக்கண்காட்சியில், அரசு வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், வேளாண் கல்லுாரி, விவசாய இயந்திர உற்பத்தியாளர்கள், இயற்கை விவசாயிகள், இடு பொருட்கள், உணவு பொருள் மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை மானியத்திட்டங்கள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது.மேலும், விளைபொருட்களை மதிப்பு கூட்டுப்பொருட்களாக உற்பத்தி செய்தல், வருவாய் அதிகரிக்கும் வகையில், சித்தா, ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள், விற்பனை வாய்ப்புகள் குறித்த கண்காட்சி மற்றும் செயல்விளக்க கருத்தரங்குகள் நடக்கிறது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள், நபார்டு வங்கி என, 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது.கண்காட்சியில் அனைவரும் பங்கேற்குமாறு, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை