உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறுவடை இயந்திரங்கள் தேவை; நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பு

அறுவடை இயந்திரங்கள் தேவை; நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடுமலை; 'வேளாண் பொறியியல் துறை வாயிலாக, குறைந்த வாடகையில், அறுவடை இயந்திரங்களை பெற்றுத்தர வேண்டும்,' என மடத்துக்குளம் வட்டார நெல் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், அமராவதி அணை பாசனத்தை பயன்படுத்தி இரு போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தொழிலாளர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், அறுவடையின் போது பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, அறுவடைக்காக இயந்திரங்களையே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இத்தகைய இயந்திரங்கள் சீசனின் போது பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.இவ்வகை இயந்திரங்களுக்கு தனியாரை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர். இதனால், கூடுதல் செலவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே, அறுவடையின் போது வேளாண் பொறியியல் துறை வாயிலாக குறைந்த வாடகையில், நெல் அறுவடை இயந்திரத்தை பெற்றுத்தர வேண்டும்.விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களை ஏற்படுத்தி, மானியத்தில் இயந்திரம் வாங்கவும் உதவ வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ