உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதாரப் பிரச்னை; பா.ஜ., மனு

சுகாதாரப் பிரச்னை; பா.ஜ., மனு

அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பிரபு ரத்தினம், துணைத் தலைவர் ராஜசேகரன், பொருளாளர் சதீஷ்குமார், சக்தி கேந்திரா பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பி.டி.ஓ., (ஊராட்சி) விஜயகுமாரிடம் அளித்த மனு:வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயன் கோவில் காலனி பகுதி, பாலமுருகன் திருமண மண்டபம் எதிரிலும், அங்கன்வாடி மையம் எதிரிலும் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதோடு கடும் துர்நாற்றமும் வீசியது. சுவாச பிரச்னை, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்றி துாய்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை செய்யக்கூடிய நிரந்தர திட்டம் அமல்படுத்த வேண்டும். ராயன் கோவில் காலனி அங்கன்வாடிக்கு அருகில் உள்ள சிதிலமடைந்த மேல்நிலைத் தொட்டியை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை